வீதி ஓட்ட நிகழ்வு PDF Print E-mail
There are no translations available.

எமது கல்லூரியின் 2016ம்  ஆண்டுக்கான விளையாட்டு போட்டியை  ஆரம்பிப்பதன் முகமாக இன்றைய தினம் (28.01.2016) காலை 6.00 மணியளவில்  வீதி ஒட்ட நிகழ்வு இடம் பெற்றது . ஆண்களுக்கான போட்டி  உமையாள்புரம் அ த க பாடசாலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது இதனை இப்பாடசாலை அதிபர் திரு அருளானந்தம் அவர்கள்  கொடியசைத்து தொடக்கி வைத்தார் . பெண்களுக்கான போட்டி பரந்தன் சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது இதனை கிளிநொச்சி வைத்தியசாலை மருத்துவ பரிசோதகர்  கொடியசைத்து தொடக்கி வைத்தார் .  சுமார்  50 க்கும்மேற்பட்ட மாணவ மாணவியர் இப்போட்டியில் பங்குபற்றினர் . பின் 8.00 மணியளவில் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது . பரிசில்களை கல்லூரியின் அதிபர் , பிரதி அதிபர் , பாடசாலை அபிவிருத்திசங்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பலரும் வழங்கி சிறப்பித்தனர் . இன்றைய பரிசில்கள் உதவியினை  எமது கல்லூரியின் ஆசிரியை திருமதி ராஜினி பாஸ்கரன் அவர்கள் வழங்கியிருந்தார் . கிளிநொச்சி வீதி பாதுகாப்பு போலீஸ் உத்தியோகத்தர் மற்றும் நோயாளர் காவு ஊர்தி மற்றும் கிராம மக்கள் போன்றோர்  நிகழ்வு சிறப்புற ஒத்துழைப்பு வழங்கி சிறப்பித்தனர் .

alt alt alt 

alt alt alt alt