News
வீதி ஓட்ட நிகழ்வு PDF அச்சிடுக மின்னஞ்சல்

எமது கல்லூரியின் 2016ம்  ஆண்டுக்கான விளையாட்டு போட்டியை  ஆரம்பிப்பதன் முகமாக இன்றைய தினம் (28.01.2016) காலை 6.00 மணியளவில்  வீதி ஒட்ட நிகழ்வு இடம் பெற்றது . ஆண்களுக்கான போட்டி  உமையாள்புரம் அ த க பாடசாலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது இதனை இப்பாடசாலை அதிபர் திரு அருளானந்தம் அவர்கள்  கொடியசைத்து தொடக்கி வைத்தார் . பெண்களுக்கான போட்டி பரந்தன் சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது இதனை கிளிநொச்சி வைத்தியசாலை மருத்துவ பரிசோதகர்  கொடியசைத்து தொடக்கி வைத்தார் .  சுமார்  50 க்கும்மேற்பட்ட மாணவ மாணவியர் இப்போட்டியில் பங்குபற்றினர் . பின் 8.00 மணியளவில் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது . பரிசில்களை கல்லூரியின் அதிபர் , பிரதி அதிபர் , பாடசாலை அபிவிருத்திசங்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பலரும் வழங்கி சிறப்பித்தனர் . இன்றைய பரிசில்கள் உதவியினை  எமது கல்லூரியின் ஆசிரியை திருமதி ராஜினி பாஸ்கரன் அவர்கள் வழங்கியிருந்தார் . கிளிநொச்சி வீதி பாதுகாப்பு போலீஸ் உத்தியோகத்தர் மற்றும் நோயாளர் காவு ஊர்தி மற்றும் கிராம மக்கள் போன்றோர்  நிகழ்வு சிறப்புற ஒத்துழைப்பு வழங்கி சிறப்பித்தனர் .

alt alt alt 

alt alt alt alt

 

 
வீதி பாதுகாப்பு செயலமர்வு PDF அச்சிடுக மின்னஞ்சல்

22.01.2016 இன்று கிளிநொச்சி பொலிஸ் நிலைய அதிகாரிகளால் எமது கல்லூரி மாணவர்களுக்கு வீதி  பாதுகாப்பு , மற்றும் விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பான விடயங்களை  செயல்பாட்டு வடிவில் விளக்கமளித்தனர் .  இதில் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்

.altaltalt

 
தரம் 6 - மாணவர்களின் வரவேற்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்

 இவ்வாண்டுக்கான தரம் 6 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது 20.01.2016  இன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக திருமதி கௌரி சந்திரசேகரம் (ஓய்வு பெற்ற முன்னால் ஆரம்ப கல்வி ஆசிரிய ஆலோசகர் ) அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரைகளை வழங்கினார் . இதில் கல்லூரியின்  அதிபர் , பிரதி அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

altalt

 
பொங்கல் விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்

தமிழர் திருநாளாம் தைபொங்கல் விழா    20.01.2016   இன்று சிறப்புடன் கொண்டாடப்பட்டது . ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து தமக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் பொங்கலிட்டு  இறைவணக்கம் செலுத்தி ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர் .

 altalt

 
பொங்கல் விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்

தமிழர் திருநாளாம் தைபொங்கல் விழா    20.01.2016   இன்று சிறப்புடன் கொண்டாடப்பட்டது . ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து தமக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் பொங்கலிட்டு  இறைவணக்கம் செலுத்தி ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர் .

 altalt

 
<< தொடக்கம் < முன் 1 2 3 அடுத்தது > முடிவு >>

பக்கம் 1 - மொத்தம் 3 இல்